Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

Nethaji Subash Chandra Bose நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(0)
Price: 222.00

In Stock

SKU
SIXTHSENSE 009
தேசத்தந்தையாக காந்தியின் விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கணி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார். புரட்சி வழியே சென்ற போஸ் பல சாகஸ பயணங்களைக் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார். 'நீ காண விரும்பும் மாற்றத்தை முதலில் உன்னிடமிருந்தே தொடங்கு’ என்ற காந்தியின் அறிவுரையை அவர் வாழும் காலத்திலேயே பின்பற்றும்விதமாகவே ஒரு கட்டத்தில் காந்தியை விட்டு விலகி பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன் கொள்கையின் மீதான பற்றுதலையும், தீவிரத்தையும் அதற்கிருக்கும் மக்கள் ஆதரவையும் நிரூபித்துக் காட்டினார் போஸ். ஆட்சியாளர்கள், அவர்கள் வகுத்த சட்டத்திற்கு உட்பட்ட தார்மீக உரிமைகளைக் கோரும் சமரசமே தன் அறப்போராட்டத்தின் உச்சபட்ச இலக்கு என்பது காந்தியின் நிலைப்பாடு. சுய ராஜ்ஜியம் என்பது எங்கள் உடைமையை. அதைத் தட்டிப்பறித்தவனிடம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்பது போஸின் பிரகடனம். 'பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று கிளம்பினால் உலகமே குருடாகிவிடும் ’ என்று எச்சரித்தார் காந்தி. உலகப்போரில் பிரிட்டனின் பின்னடைவை சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள மறுத்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். என் எதிரியின் எதிரி என் நண்பன் என்று சூளுரைத்த போஸ் ஆங்காங்கே உதிரிகளாக இருந்த புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்று திரட்டினார். இரண்டாம் உலகப்போர் நடக்கும் தறுவாயில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிரான மாபெரும் சக்திகளாக அவர் கணித்த ரஷ்யாவிடமும், ஜெர்மனியிடமும், இத்தாலியிடமும், ஜப்பானிடமும் தன் போராட்டத்தை விளக்கி அவர்களின் ஆதரவைக் கோரினார். ஹிட்லரும், முஸோலனியும், டோஜோவும் போஸை சுதந்திர இந்தியாவின் சக சர்வாதிகாரியாக திகழும்படி வாழ்த்தினார்கள். ஆனால் போஸ் தெளிவாகக் கூறினார் “நான் நாடு பிடிக்கும் ஆசையில் போராடவில்லை. என் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் மலரும். தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.” வரலாறு வெற்றி பெற்றவனின் பார்வையிலேயே எழுதப்படுகிறது. போஸின் போராட்டம் முதிர்ச்சியற்றது,. போல்ஷவிக் புரட்சியின் தாற்காலிக வெற்றியைக் கண்டு புரட்சியில் குதித்து சராசரி மக்களின் வலிகளைப் பற்றியோ அல்லது வாழ்வியல் பற்றியோ அடிப்படை புரிதல்கூட இல்லாத அறிவுஜீவியினுடைய புரட்சி என்கிறது பாடப்புத்தகம். ஆனால் ஜெர்மனி ரஷ்யாவுடன் மோதாதிருந்திருந்தால்? பிரிட்டனுக்கு அமெரிக்க வான்வழித் தாக்குதலின் உதவியில்லாமல், ஜப்பானின் ஆதரவோடு இம்பாலைத் தாண்டி தறைவழிப்போரில் வங்கத்தை ஐ.என்.ஏ எட்டியிருந்தால்? இன்று பூகோளப் புத்தகத்தைப் புரட்டும்பொழுது நாம் காணும் உலக வரைபடம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். காந்தியின் விவேகமும், போஸின் விவேகமும் இந்திய சுதந்திர வேள்வியை இந்தியாவின் ஆமும் புறமுமாக இருந்து செலுத்திய எதிரெதிர் விசைகள். அஹிம்சைக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றிக்கும் பிரிட்டிஷார்- இந்தியர்கள் அறவழிப்போரில் நம்பிக்கையிழந்துவிட்டால் உள் நாட்டில் புரட்சி வெடிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்தியர்களின் படை அப்படியே போஸை நோக்கி அணிவகுத்துவிரும் என்ற அச்சத்தின் அச்சாரம். பூரண சுதந்திரம் பெரும் முன்னரே வெள்ளையர்களின் குறுக்கீடே இல்லாத சுதந்திர இந்தியாவிற்கான மாதிரி அரசாங்கத்தையும், காங்கிரஸுக்கு மாற்றான அரசியலையும் பர்மாவிலும், அந்தமானிலும் அரங்கேற்றிக் காட்டினார். ஆஸாத் ஹிந்தில் ஏற்றப்பட்ட அதே மூவர்ணக் கொடியில் புலிக்கு பதிலாக ராட்டையும், பின்பு அசோகச் சக்கரமும் கொண்ட இந்திய தேசியக் கொடியாக உருப்பெற்றது. போஸ் தேர்வு செய்த அதே தாகூரின் பாடல் வரிகள் வேறு வடிவில் தேசிய கீதமாக நாடு எங்கும் ஒலிக்கிறது. இன்று தாத்தா காந்தி, மாமா நேருவின் பிறந்த நாட்கள் தேசிய விடுமுறைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நேதாஜி இன்றும் நாட்டுப்புற கதைகளில் போற்றப்படும் ஒப்பில்லா தலைவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்! அப்படிப்பட்ட வீர மைந்தனின் சரிதையைத் தோற்றம் முதல் மறைவு வரை குழப்பங்கள், சர்ச்சைகள், அரசியல் முலாம் பூசும் முயற்சிகளிலிருந்து மீட்டெடுத்து இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கும் முக்கியமான வரலாற்று ஆவணம் இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.