கிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ பணம் என்று ’கிரிப்டோகரன்ஸி’ ஒரு குறுக்குவழி எனப் பலரும் இதில் போய் விழுந்து மடிகிறார்கள்.
கிரிப்டோவைப் பற்றியும், அதன் நதிமூலமான சைபர்பங்க்ஸ் பற்றியும் பேசும் முதல் தமிழ் புத்தகம் இதுதான்.
கிரிப்டோகரன்ஸி பற்றியும், ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பற்றியும், சாதாரண மக்கள் மீதான அன்புடன் அவர்கள் ஏமாந்துவிடக் கூடாதென அக்கறையுடன் எழுதப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகம் உங்கள் எதிர்காலத்தின் ஒரு திறவுகோல் என்றால் மிகையில்லை.
No product review yet. Be the first to review this product.