எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக்.
யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இவர். சிறுவனாக இருந்தபோது பெல்கிரேட் நகரத்தில் கண்ட இரண்டாம் யுத்தத்தின் கொடூரக் காட்சிகள்தான் அவரது பார்வையையும் கவிதை உலகையும் வடிவமைத்திருக்கின்றன.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தையும் படைப்பெழுத்தையும் பாடமாக 30 ஆண்டுகளுக்கும் மேல் போதித்த பேராசிரியர். சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை சார்லஸ் சிமிக்கின் சிறந்த கவிதைகள் அனாயாசமாக அழித்துவிடுகின்றன.
No product review yet. Be the first to review this product.