நீங்கள் இணையம் பயன்படுத்துபவரா? தேர்தலில் ஓட்டு போடுவீர்களா? இது போதும். உங்களை வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்டக் கட்சிக்கு வாக்களிக்க வைக்கமுடியும். அது நடந்தும் இருக்கிறது. மூன்றே வார்த்தைகளில் எளிமையாகச் சொன்னால் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் தேர்தலில் ரகளை செய்வது, வாக்குப்பெட்டியைத் திருடிச் செல்வது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதெல்லாம் கற்காலம். வெள்ளை வேட்டி, கதர்ச் சட்டை போடுபவன் அதற்கு மேல் யோசிக்க முடியாது.இது டிஜிட்டல் யுகம். உங்கள் தகவல்களைத் திரட்டி இல்லை திருடி, உங்களுக்கே தெரியாமல் மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் வாடிக்கையாளருக்கு உங்களை வாடிக்கையாளராக மாற்றியிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் டிஜிட்டல் போதைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அவர்களின் வாடிக்கையாளருக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்கள்.கணிப்பொறி, உளவியல், மார்கெட்டிங், பிராண்டிங் நிபுணர்களின் உதவியுடன் தேர்தல்களில் உங்களை வசியப்படுத்தி, நீங்கள் பரம்பரையாக எதிர்க்கும் கட்சிக்குக் கூட உங்கள் வாக்கை செலுத்தத் தூண்ட முடியும். தேர்தல் காலம் இது.அமெரிக்காவில் ட்ரம்ப் வென்றது இப்படித்தான். இது அமெரிக்கத் தேர்தலில் மட்டும் நடக்கவில்லை. கென்யா, மால்டா, மெக்ஸிகோ இவ்வளவு ஏன் இந்தியத் தேர்தலிலும் கூட சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது.உங்கள் ஓட்டு யாருக்கு என்று நிர்ணய்க்கும் கார்ப்பரேட் நிறுவன நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் இந்தப் புத்தகம், உங்கள் ஓட்டுரிமையை மீட்டெடுக்க உதவும்.
No product review yet. Be the first to review this product.