அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைச் சொல்லும் ஆவணம். இருட்டுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை நோக்கி வழிநடத்திய தீப்பந்தம். பட்டியல் சாதி மக்களின் ஒப்பற்ற தலைவரின் உத்வேக முழக்கம்.
சாதி மத பேதமின்றிப் பலரையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காகச் சிந்தித்த மகத்தான மனிதரின் கைகள் வரைந்த வரலாற்றுச் சித்திரங்கள் இந்தக் கடிதங்கள்.
அம்பேத்கரின் மேடைப் பேச்சின் ஊக்கமும் அவரது வயலின் இசையின் துயரமும் ஒருங்கே பிரதிபலிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை இக்கடிதங்களில் உணரலாம். தலித்துகளின் போராட்ட வரலாற்றில் இவற்றுக்கு முக்கிய இடமுண்டு. கால்களின் சுவடுகள் போல இவை கைகளின் சுவடுகள்.
No product review yet. Be the first to review this product.