சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் நாவல்
பதினான்காம் நூற்றாண்டு இத்தாலிய மடாலயம் ஒன்றில், மதகுருக்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்தச் சாவுகளின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய, கூர்மையான அறிவு கொண்ட ஃபிரான்ஸிஸ்கன் துறவி வில்லியமும், அவரது இளம் சீடர் அட்ஸோவும் அங்கே வருகிறார்கள்.
ஆனால், இது ஒரு சாதாரண துப்பறியும் கதை அல்ல. கொலைகாரனைத் தேடும் வில்லியத்தின் தர்க்கப் பாதையில், அரிஸ்டாட்டிலின் தத்துவமும், இறையியல் விவாதங்களும், சரித்திரத்தின் புதிர்களும் குறுக்கிடுகின்றன. ஒருபுறம் பகுத்தறிவு உண்மையை நெருங்க முயல, மறுபுறம் இளம் அட்ஸோவின் தற்செயலான வார்த்தைகள் மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கின்றன.
நகைச்சுவை உலகை ஆளத் தொடங்கினால், மதநம்பிக்கையின் நிலை என்னவாகும் என்ற அச்சத்தில், தடைசெய்யப்பட்ட ஒரு நூலைக் காக்க நடக்கும் கொலைகளா இவை? பொருளுக்கும் பெயருக்கும், உண்மைக்கும் வார்த்தைக்கும் உள்ள உறவை ஆராயும், உலகப் புகழ்பெற்ற உம்பர்ட்டோ எக்கோவின் இந்த மகத்தான படைப்பு, ஒரு துப்பறியும் கதையின் சுவாரஸ்யத்தோடு, தத்துவம், குறியியல் மற்றும் வரலாற்றின் ஆழங்களுக்குள் உங்களை அழைத்துச்செல்லும் ஒரு மறக்க முடியாத வாசிப்பனுபவத்தைத் தருவதாக இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.