எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்களை சம்பந்தமில்லாத இன்னும் வேறு சிலருக்குப் பொருத்தினேன்.
இந்த விளையாட்டு எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஒரு கதைக்குள் நானே எனக்காக நிகழ்த்திப் பார்த்த மாறுவேடப் போட்டிபோல. எல்லாருடைய பால்யங்களும் ரசனைமிக்கவை. நினைத்தால் இன்பமளிப்பவை. சுவாரசியமானவை. அந்த வயதுகளில் சந்திக்க நேர்கிற துக்கங்களுமேகூடப் பின்னாள்களில் நினைத்து வியக்கவோ, சிரிக்கவோ, சிலிர்க்கவோ எதையோ ஒன்றைச் சேமித்து வைக்கத்தான் செய்யும்.
இது என்னுடைய பால்யம். இதில் நீங்கள் தெரிகிறீர்களா பாருங்கள்!
-பாரா
No product review yet. Be the first to review this product.