புத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், படிப்போருக்குப் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
க. ஜெயச்சந்திரன் அவர்கள் பவுத்தம் தொடர்பான நூல்களை ஆழக்கற்று எளிமையாக இந்நூலைப் படைத்திருக்கிறார்.
படிக்கும் போதே மனமகிழ்ச்சி உண்டாகிறது. புத்தரை நெருங்கிப் படிக்கவும், ஆழ்ந்து விசாரிக்கவும், உள்வாங்கவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தொடக்கநிலை வாசகர்களுக்குமட்டுமின்றி பவுத்தத்தை மீண்டும் அசைபோட விரும்புகின்ற ஆய்வாளர்களுக்கும் பவுத்த உபாசகர்களுக்கும் இந்நூல் ஓர் எளிய வாய்ப்பினை வழங்குகிறது. படித்துப் பயன் பெறுங்கள்.
கௌதம் சன்னா
No product review yet. Be the first to review this product.