“வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் ‘அவயம்’ நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும். அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்கள், அவமானங்கள், சுயசிதைவு எல்லாவற்றையும் ஒற்றை மனிதனை வைத்துப் பேசுகிறது. இந்நாவல். கதைக்குள் வாழ்கிற எளிய மனிதர்கள் மூலம், பல இடங்களில் ‘ஆஹா!’ என வியக்கவும், ‘அடடா!’ என்று சிலிர்க்கவும் வைப்பதுதான் இந்த நாவலின் பலம். அது ஏக்நாத்தின் பலமும் கூட.
No product review yet. Be the first to review this product.