கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவின் இந்நூல் தம் அம்மாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைகளைக் கொண்டது. பெரும்பாலானவற்றில் அம்மாவே முதன்மைப் பாத்திரம். அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிலவற்றில் வேறொன்றைப் பற்றிய நினைவுக் குறிப்புகளுக்கு இடையே அம்மாவும் தம் வீச்சோடு தலைகாட்டிச் செல்கிறார். வசுதேந்த்ராவின் பெற்றோர், சொந்த ஊர், பின்னணி முதலிய அனைத்தையும் அறியும் தன்வரலாற்று நூலாகவும் இதைக் காணலாம். அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவையும் சுயஎள்ளலும் வாய்விட்டுச் சிரித்தபடி வாசிக்கச் செய்கின்றன. ஆனால் துயர் சூழ்ந்த கணங்கள் பலவும் அடியோட்டமாகச் செல்கின்றன. ஒரு கட்டுரையை வாசித்ததும் அடுத்ததை நோக்கி மனம் தாவுவதைத் தவிர்க்க முடியாது. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் செய்யும் நூல் இது.
- பெருமாள்முருகன்
No product review yet. Be the first to review this product.