Loading... Please wait...

Categories

Our Newsletter


பசுமை அரசியல்

Price:
Rs.70.00
SKU:
NCBH 113
Weight:
0.18 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
சுப்ரபாரதிமணியன்

Product Description

தமிழகத்தில் காணாமல் போகும் நதிகள் முதல் மீத்தேன் வாயு, காடழிப்பு, நீர் மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சினைகளை அரசியல் இயக்கமாக முன்னெடுக்கவேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஒரு பூவின் வெவ்வேறு அடுக்குகள போல் பசுமை அரசியல் சார்ந்த பல்வேறு விசய பரிமாணங்களான பழங்குடி குரல், பசுமை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில படைப்புகள் பற்றிய கருத்தாக்கங்கள், பசுமைப் பிரச்சினைகள் சமீப வெகுஜனத்திரைப்பட அத்தாட்சிகள் போன்றவை இந்நூலில் அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றன. பின்நவீனத்துவ அரசியல் முன்வைத்ததில் பழங்குடியினர் குரல் முக்கியமானது. அவர்களின் குரலை வெளிப்படுத்தும் இந்நூலின் ஒரு முக்கியப் பகுதி வசன கவிதைகளாய் இடம்பெற்றுள்ளது.

மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி.
யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார்.
மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.
மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.
தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பசுமை அரசியல் to your wish list.

You Recently Viewed...