Loading... Please wait...

Categories

Our Newsletter


தூண்டல்கள் ( பாகம் 1 )

Price:
Rs.100.00
SKU:
NANVAYAL 001
Weight:
0.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

தூண்டல்கள் ( பாகம் 1 ) என்பது குழந்தைகளுக்கான ஆய்வு கதைகளின் தொகுப்பு.

எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் நிலை நிறுத்துவதுதான் இந்த நூலின் நோக்கம்.

ஒவ்வொரு கதையிலும், குறிப்பிட பட்ட விஷயங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க பட்டிருக்கின்றன.

 

இதில் இடம் பெற்றிருக்கும் 'பாதுகாப்பு விதிகள்' என்கிற கதையின் ஒரு பகுதி.

==============================================================================

ஒரு பெரிய கருப்பு நிற கோழி தன்னுடைய குஞ்சுகளுடன் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அவற்றை மிரட்டுவது போல ஒரு காகம் அடிக்கடி தாழ பறந்து வந்தது.

பக்கோடாவை கொறித்து கொண்டு உட்கார்ந்திருந்த சுதேவுக்கும், விவேக்குக்கும் கண்ணெல்லாம் அவற்றின் மேல்தான்.

காகத்தை காணும் போதெல்லாம் தாய் கோழி ஒரு மாதிரி கொக்கரிப்பதும் , உடனே கோழி குஞ்சுகள் அலறி புடைத்து கொண்டு ஒளிந்து கொள்வதும் அந்த பட்டிணத்து பிள்ளைகளுக்கு பெரிய அதிசயமாய் தெரிந்தது.

ஓட்டமாய் ஓடி போய் இந்த விஷயத்தை தாத்தாவிடம் பகிர்ந்தார்கள்.

லீவு விட்டால் கிராமத்துக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அது ஒரு ஆச்சரியமான உலகம். 'இயற்கையும், விஞ்ஞானமும் இரண்டற கலந்தவை' என அறிவிக்கும் பாடசாலை அது. கிராமத்து தாத்தாக்கள் எல்லோருமே இன்றைய பிள்ளைகள் தொலைத்திருக்கும் இயற்கை விஞ்ஞானிகள்.

காக்கை - கோழி கதையை கேட்ட ராமகிருஷ்ணன் கொஞ்சமும் அலட்டி கொள்ள வில்லை. பேரன்களின் பரபரப்பை பார்த்து சிரித்தவர் , அவர்களை மாட்டு தொழுவத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு ஒரு மூலையிலிருந்த கூடையில் இன்னொரு பெட்டை கோழி அடை படுத்திருந்தது . இவர்களை கண்ட உடனே சிறகுகளை சிலிர்த்த அந்த பறவை 'கர்'ரென்று பெரும் ஓசையுடன் முனகியது.

மெதுவாக கோழியை தூக்கிய தாத்தா இரண்டு முட்டைகளை மட்டும் எடுத்தார். அலுங்காமல் அவற்றை எடுத்து வந்து, ஒரு வழவழப்பான மேசை மேல் வைத்தார்.

அந்த முட்டைகள் அடை வைக்க பட்டு 19 நாட்கள் ஆகிறதென்றும், இன்னும் இரண்டொரு நாளில் அவை பொரித்து குஞ்சுகள் வெளி வரும் என்றும் பிள்ளைகளிடம் விளக்கினார்.

பின்னர் , காகத்தை கண்ட தாய் கோழி செய்யும் கொக்கரிப்பை போல தாத்தா எச்சரிக்கை ஒலி எழுப்பியதுதான் தாமதம்...மேசை மீது இருந்த முட்டைகள் தாமாகவே இங்கும், அங்கும் அலைந்து உருண்டன.

தாயை கண்டதுமில்லை ; அதன் குரலை கேட்டதுமில்லை ; காக்கையை அறிந்ததும் இல்லை...ஆனாலும், முட்டைக்குள் இருந்த குஞ்சுகள் ஆபத்தை அறிந்திருந்தன.

குட்டி பையன்களோ, பிளந்த வாயை மூடவே இல்லை.

'இது எப்படி தாத்தா சாத்தியம் ..? '

' சாத்தியம்தான் சுதேவ் ! இந்த மாதிரியான பாதுகாப்பு உணர்வுகள் தலைமுறைகள் கடந்த மரபு வழியாய் வந்தவை. ஆண்டவனின் அனுகிரகம் இப்படியெல்லாம் வியாபித்திருப்பதாலேயே கோழிகளும், பிற உயிர்களும் பூமியில் உலவி கொண்டிருக்கின்றன' .


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the தூண்டல்கள் ( பாகம் 1 ) to your wish list.

You Recently Viewed...