Loading... Please wait...

Categories

Our Newsletter


தஞ்சைப் ப்ரகாஷ் சிறுகதைகள்

Price:
Rs.400.00
SKU:
DISCOVERY 032
Weight:
0.53 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ராகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். ப்ரகாஷ் அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியுற்ற நிதானம் கொண்ட கதைசொல்லி. வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை இவரது கதைகளில் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்து கொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச்சவாலுக்குரிய ஒன்று. துரோகங்கள், புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள் என எல்லாச் சோதனைகளையும் சந்தித்து இடிபாடடைந்து. கைவிடப்பட்ட பழைய வீட்டைப்பார்ப்பதற்கு ஒப்பானது. அதிலிருந்து மனதைச் சுத்திகரித்து மீள்வதற்கு, கடும் பிரயத்தனமும், அசாத்திய நம்பிக்கையும் தேவை. வாழ்க்கையின் பிரம்மாண்டமான பகாசுரச் சக்கரங்களின் கீழ் நசுங்கி வதைபடும் மனித மனங்களில் உறவுகளுக்கிடையே ஏற்படுகிற சிக்கல்களால், கீழ் - மேல்நிலைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம். ப்ரகாஷ் தன் கதைகளின் வழியே அறியத் தருகிற மன அமைப்புகளை உள்வாங்கிக் கொண்டால், எதன் பொருட்டு இச்சிக்கல்கள் நம்மை அலைக்கழிக்கின்றன என்ற ஓர் இழையை உணரமுடிகிறது. முடிவற்று எழுகிற காமம், ஒளிக்கப்படுகிற அடக்கப்படுகிற அந்தரங்க உடல் எழுச்சிகள், அதனால் ஏற்படுகிற குழப்பமும், சோர்வும், அலைக்கழிப்புகளும் முடிவற்ற நெடுங்கதையாகக் காலங் காலமாகத் தொடர்வதைப் புரிந்து கொள்ளலாம்.

- பொன். வாசுதேவன்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the தஞ்சைப் ப்ரகாஷ் சிறுகதைகள் to your wish list.

You Recently Viewed...