Loading... Please wait...

Categories

Our Newsletter


கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள்

Price:
Rs.250.00
SKU:
BHARATHIPUTHAKAM 034
Weight:
0.31 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம்என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப்புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம்கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்கவரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான்பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்தநாட்களின் அன்றாடமாக இருந்தது. பண்ணையடிமைகளின் தினசரி வாழ்வின் துயர்மிக்கபக்கங்கள் கீழத்தஞ்சை மண்ணில்தான் எழுதப்பட்டன. அந்தக் கொடுமைகளுக்கு எதிராகதிகைத்து நிற்காதே திருப்பி அடி என்று மக்களை எழுச்சியுறச்செய்த செங்கொடிஇயக்கமும் இங்குதான் வீறு கொண்டு எழுந்தது.
 
ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இங்கு பண்ணையம் பார்த்த மடத்துக்கு எதிராகதென்பரையில் வெடித்துக்கிளம்பிய கிசான் சபாவின் இடிமுழக்கம் இங்குதான் முதலில்கேட்டது. தமிழகத்துக்கே முன்னோடியான விவசாயிகளின் போராட்டமும் நாகையில்தமிழகத்தை உலுக்கிய ரயில்வே தொழிலாளர் போராட்டமும் இந்த மண்ணில்தான்மண்கீறிக்கிளம்பியது. அதிகாரப்பூர்வமானவை எனச்சொல்லப்பட்ட வரலாறுகளில் இந்தமக்களின் போராட்டங்களுக்கு இன்றுவரை இடமில்லை. இலக்கிய உலகத்தால்கொண்டாடப்படும் நவீன இலக்கியங்கள் எதிலுமே சாட்டையடிகளின் சத்தம்கேட்கவில்லை. அதிலெல்லாம் கொலுசுகளின் சிμங்கல் மொழியே பதிவாகியிருந்தது.சகதியிலே நம் மக்கள் முங்கிக்கிடந்தபோது அந்த இலக்கியங்கள் மோகத்தில்முத்தெடுத்துக்கொண்டிருந்தன.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம்என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப்புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம்கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்கவரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான்பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்தநாட்களின் அன்றாடமாக இருந்தது. பண்ணையடிமைகளின் தினசரி வாழ்வின் துயர்மிக்கபக்கங்கள் கீழத்தஞ்சை மண்ணில்தான் எழுதப்பட்டன. அந்தக் கொடுமைகளுக்கு எதிராகதிகைத்து நிற்காதே திருப்பி அடி என்று மக்களை எழுச்சியுறச்செய்த செங்கொடிஇயக்கமும் இங்குதான் வீறு கொண்டு எழுந்தது. ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இங்கு பண்ணையம் பார்த்த மடத்துக்கு எதிராகதென்பரையில் வெடித்துக்கிளம்பிய கிசான் சபாவின் இடிமுழக்கம் இங்குதான் முதலில்கேட்டது. தமிழகத்துக்கே முன்னோடியான விவசாயிகளின் போராட்டமும் நாகையில்தமிழகத்தை உலுக்கிய ரயில்வே தொழிலாளர் போராட்டமும் இந்த மண்ணில்தான்மண்கீறிக்கிளம்பியது. அதிகாரப்பூர்வமானவை எனச்சொல்லப்பட்ட வரலாறுகளில் இந்தமக்களின் போராட்டங்களுக்கு இன்றுவரை இடமில்லை. இலக்கிய உலகத்தால்கொண்டாடப்படும் நவீன இலக்கியங்கள் எதிலுமே சாட்டையடிகளின் சத்தம்கேட்கவில்லை. அதிலெல்லாம் கொலுசுகளின் சிμங்கல் மொழியே பதிவாகியிருந்தது.சகதியிலே நம் மக்கள் முங்கிக்கிடந்தபோது அந்த இலக்கியங்கள் மோகத்தில்முத்தெடுத்துக்கொண்டிருந்தன.

 


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் to your wish list.

You Recently Viewed...