Loading... Please wait...

Categories

Our Newsletter

இந்திய வானம்

Price:
Rs.200.00
SKU:
VIKATAN 301
Weight:
0.28 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
கடந்த 25 ஆண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். 75-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்தி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாகப் பல லட்சம் வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார்.
ஜுனியர் விகடனில் எழுதி வெளியான எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய இரண்டு வரலாற்று நூல்கள் இந்தியாவின் மறைக்கப்பட்ட சரித்திர உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இதேபோல் ஜுனியர் விகடனில் இவர் எழுதிய உணவு யுத்தம் தொடரும் பெரும் வரவேற்பைப் பெற்று நூல்கா வெளிவந்துள்ளது.
மகாபாரதத்தை மையமாகக் கொண்டு இவர் எழுதிய உப பாண்டவம் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாகும். இவரது யாமம் நாவல் இலக்கியத்துக்கான உயரிய விருதான தாகூர் பரிசைப் பெற்றிருக்கிறது. இந்த விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவரே.
நெடுங்குருதி சிறந்த நாவலுக்கான ஞானவாணி விருதைப் பெற்றுள்ளது. இவரது நிமித்தம் நாவல் மாசிலா விருது உள்ளிட்ட மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.
வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் விருது, பெரியார் விருது, ஞானவாணி விருது, விஸ்டம் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி தமிழ் விருது, சி.கே.கெ விருது, கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the இந்திய வானம் to your wish list.

You Recently Viewed...