Loading... Please wait...

Categories

Our Newsletter


அரசியல் பேசும் அயல் சினிமா

Price:
Rs.140.00
SKU:
BHARATHIPUTHAKAM 042
Weight:
0.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

ஆண்டாண்டு காலமாக தமிழ் பேசும் நல்லுலகிற்கு, உலகத் திரைப்படமென்றால் ஆங்கில ஆலிவுட் திரைப்படங்களாகத்தான் இருந்து வந்திருக்கிறது. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் எந்தத்திரைப்படங்களும் உலக அரசியலின், உழைக்கும் மக்களின் உண்மை நிலையினை நமக்குச்சொல்லியதில்லை. பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்டியவர்கள், அதற்குள்ளே சுரண்டப்படுகிற மக்களின் உழைப்பை நமக்குக் காட்டியதில்லை.

அரசியலற்ற ஃபேன்டசி திரைப்படங்களையும் ஆதிக்க அரசியலை மறைமுகமாகச் சொல்கிற அதிரடி ஆக்சன் படங்களும்தான் நமக்கு உலகத் திரைப்படங்களாக திணிக்கப்படுகின்றன.

சில நாடுகளின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் மாற்றங்களையும் சொல்ல வேண்டும் என்கிற ஆவலில், அது தொடர்பான திரைப்படங்களையும், அவை பேசும் பின்னனி அரசியலையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகளை பாரதி புத்தகாலயம் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறது.

- இ.பா.சிந்தன் 

**

நீங்கள் குடிக்கும் காப்பியில்... 
உங்கள் கையிலிருக்கும் செல்போன்களில்... 
உங்கள் குழந்தைகள் ருசித்து சாப்பிடும் சாக்லேட்டுகளில்... 
நீங்கள் குடிக்கும் தண்ணீரில்... 
என ஒவ்வொன்றின் பின்னாலும் ஒளிந்திருக்கும் அரசியலை பேசும் படங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம்... படிக்கப்படிக்க மனம் பதைபதைக்கிறது... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நமக்கு நாமே கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது... 

இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள், நிச்சயம் அந்தப் படங்களை கண்டடைந்து பார்த்துவிடுவார்கள். அதற்கான தூண்டலை அந்தப்படங்கள் அல்ல, அவை பேசும் அரசியலே செய்துவிடும். அதற்கு சிந்தனின் எழுத்தும் ஒரு காரணமாக இருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு...
-நூல் குறித்து எஸ்.கருணா 

Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அரசியல் பேசும் அயல் சினிமா to your wish list.

You Recently Viewed...