Loading... Please wait...

Categories

Our Newsletter


வேலை, தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

Price:
Rs.215.00
SKU:
VIKATAN 292
Weight:
0.31 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

இன்றைய இணைய உலகில், மனிதனின் உள்ளங்கைக்குள் உலகம் சுருண்டு உட்கார்ந்துகொண்டுள்ளது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், உலகின் எந்த மூலையில் உள்ள நபர்களையும் பார்க்க முடியும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊறுகாய் முதல் உயிருள்ள ஓவியம் வரை அனைத்தையும் விற்பனை செய்யக்கூடிய காலம் இது. வீட்டிலேயே இருந்துகொண்டு நாம் விரும்பும் எதையும் வீட்டுக்கே தேடி வரவைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் இணையமயமானதால் இவையெல்லாம் சாத்தியமாகின்றன. அதேபோல் சமூக வலைதளங்களால் இன்று அரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த சமூக வலைதளங்கள் மூலம் நம் திறமையை மூலதனமாக்கி வியாபாரத்தைப் பெருக்க, வாய்ப்புகள் வாசல் திறந்து வைத்து காத்திருக்கின்றன. நீங்கள் எவ்வாறு அந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி முன்னேறலாம் என்று வழிகாட்டுகிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இணையம் வழியே வேலை செய்து கொடுத்துவிட்டு அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போவோர் அனேகர். அவ்வாறெல்லாம் ஏமாறாமல் நம் தொழிலை, நம்மிடம் உள்ள திறமையைக் கொண்டு சமூக வலைதளங்களால் வளமான முன்னேற்றம் பெற, இந்த நூல் பல நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்கிறது. இமெயில், கூகுள்+, வெப்சைட், பிளாக், யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்க்குடுஇன், சவுண்ட் கிளவுட், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், பின் - என அனைத்து சமூக வலைதளங்களும் உங்கள் தொழில் திறனை உலகுக்குக் காட்ட காத்துக்கிடக்கின்றன. பக்கங்களைப் புரட்டுங்கள். உங்களுக்கு வளமான வாழ்வு காத்திருக்கிறது!

நூலின் ஆசிரியரைப் பற்றி சில குறிப்புகள் :

காம்கேர் கே. புவனேஸ்வரி M.Sc., Computer Science, M.B.A. பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆகக் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அங்கு அவர் தயாரித்த 'உயர்கல்வியில் இந்திய கல்வி முறைக்கும், அமெரிக்க கல்வி முறைக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்து வருகிறார். இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தில், மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைமுறையை பாதிக்கின்றன, அவற்றில் எவை மேம்பாட்டுக்குரிய திருப்பங்கள், எவை திணிப்புகள் என்பதைக் கூர்ந்து கவனித்து வருபவர். வெற்றி என்பது சுயம், குடும்பம், சமூகம் ஆகிய மூன்று பரிணாமங்கள் கொண்ட ஒரு நிகழ்வு. வேகமாக பல விஷயங்களைக் கற்றுணர்ந்து, கிரஹித்து செயல்பட வேண்டிய சூழலில் நம் மனதில் பயனற்ற குப்பைகள் சேர்வதைத் தவிர்க்க முடியாது. அதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோம். மனதை Format செய்யக் கற்றுக்கொண்டால் நம்மால் திறம்பட செயல்பட முடியும், மனித உறவுகள் மேம்படும் என்பதை தன் சொந்த அனுபவங்களில் இருந்தும், நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர். படித்துப் பயனடைந்தால் நம் மனம் பலமானதாக நம் வெற்றிகளுக்கெல்லாம் சிறந்த பாலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the வேலை, தொழில் சிறக்க சமூக வலைதளங்கள் to your wish list.

You Recently Viewed...