Sorry but this item is currently unavailable.
Please check back at a later stage.
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல துறைகள் புறப்பட்டு வருகின்றன. பல திசைகளில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
வேலையில் சேர வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது. பேச்சுத் திறமை, அடுத்தவரோடு பழகும் திறமை என்று பலவிதமான திறமைகளும் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் ஒரு மூத்த சகோதரன் மாதிரி, இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முழுத் தகுதி படைத்தவர் 'மா ஃபா' கே.பாண்டியராஜன்.
சிவகாசிக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து & பிறந்த உடனே தந்தையை இழந்து, வறுமையில் வாடிய பாண்டியராஜன், சிறுவயதிலேயே தீப்பெட்டித் தொழிற்சாலையில் குச்சி அடுக்குவது, மருந்து முக்குவது என நாள் பூராவும் கந்தகத்திலேயே உழன்று திரிந்தவர். கடுமையான உழைப்புக்கு மத்தியில் பள்ளிக்குச் சென்று படிப்பிலும் தனது கெட்டிக்காரத்தனத்தை நிரூபித்துக் காட்டினார். அதற்குப் பரிசாக 'மேற்கல்வி உதவித் தொகை' கிடைக்க... அவர் நினைத்தே பார்த்திராத கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்புகள் தேடி வந்தன.