போரையும் வாழ்வையும் ‘தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளாவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து நடைமுறை வாழ்வில் முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.
மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி.
யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார்.
மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.
மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.
தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.