Loading... Please wait...

Categories

Our Newsletter


பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

Price:
Rs.245.00
SKU:
KALACHUVADU 041
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

கதை:
ஸ்ரீ வித்யா நடராஜன், எஸ்.ஆனந்த்

Product Description

இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் அரசியல் சாசனத் உருவாக்கியவருமான பி.ஆர்.அம்பேத்கர் வரலாறு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்தியும் நேருவும் படேலும் தேசியத் தலைவர்களாய் மக்களது நினைவில் பதியவைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அம்பேத்கர் இன்னமும் சாதித் தலைவர் என்ற வட்டத்துக்குள் ஒடுக்கப்பட்டிருக்கிறார். வெள்ளையர்கள் நம் நாட்டை அடிமை செய்திருந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர் தீண்டாமையின் கொடுமைகளை நேரடியாகக் கண்டு வளர்ந்தவர். கொலம்பியாவுக்குச் சென்று மேல்படிப்பு படித்துத் தாயகம் மீண்டபிறகும், அவரது சாதிய அடையாளம் அவரை வேட்டையாடியது. இந்தச் சம்பவங்களின் ஊடாக அவரது போராட்டங்கள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள், கோண்டு பழங்குடி ஓவியக் கலைஞர்களால் சித்திரமாகத் தீட்டப்பட்டு, பீமாயணமாக இப்புத்தகம் உருவாகியுள்ளது. வெறுமனே சுவாரசிய நிகழ்வு அடுக்குகளால் மட்டும் கதை சொல்லாமல், சாதி, இன்றும் அதன் அழுத்தங்கள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றோடு சேர்ந்து இந்தச் சித்திரப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வாசகர்கள் யார் என்பதை இப்புத்தகத்தின் வடிவமைப்பைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியவில்லை. எளிய வாசகர்கள் மற்றும் வாசிக்கப் பழகும் குழந்தைகள் இந்தப் புத்தகத்தைச் சரளமாகப் படிக்கமுடியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

- தி சன்டே இந்தியன் - செப்டம்பர் 2012


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் to your wish list.

You Recently Viewed...