தேவன் மனிதன் லூசிஃபர்
பிடிக்காத இடத்தில் சமரசம் செய்துகொண்டு வாழ்வதில் பயன் என்ன? கேள்வி கேட்பவர்களை யார் தங்களோடு வைத்துக்கொள்வார்கள் ? சேவகர்களாக மாறிவிட்ட காபிரியேலையும் வைக்கேலையும் கொண்டு லூசிஃபர் பரலோக ராஜ்ஜியத்திலிருந்து பூமிக்கு விரட்டப்பட்டான். வெளிச்சத்தைக் கொண்டுவருபவனுக்கு இருள் என்று பெயரிட்டார்கள். லூசிஃபர் சாத்தானாகிப் போனான். பூமியில் அவன் ஒரு சர்ப்பத்தைப் போல மறைந்து வாழ வேண்டியதாயிற்று.
மனிதன் கர்த்தருகும் அவர் சேவகர்களுக்கும் பணிந்துகொண்டான். லூசிஃபர் குறித்துக் கடுமையாய் எச்சரிக்கப்பட்டான். லூசிஃபருக்கென்று இவ்வுலகில் யாரும் இல்லாமல்போனபோதுதான் அவன் தன்னிடமிருந்த ஒரே ஆயுதமான அறிவை மனிதர்கள் மத்தியில் போட்டான்.