Loading... Please wait...

Categories

Our Newsletter


சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

Price:
Rs.60.00
SKU:
BHARATHIPUTHAKAM 653
Weight:
0.19 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் - சாதிக்கு முந்தைய பிந்தைய தமிழ்ச் சமூகம்

சாதி பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன.இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன. அனைத்திந்திய அளவிலும் தமிழ்மண்ணிலும் அதன் தோற்றுவாய் குறித்து இன்னும் நுண்ணிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இச்சிறுநூல் அத்திசையில்ஒரு முக்கியமான முன்னெடுப்பை நிகழ்த்துகிறது. தமிழ்ச்சமூகத்தில் இயங்கும் சாதியத்தின் அகக்கட்டுமானத்தை இந்நூலில் மானுடவியல் அறிஞர் தோழர் பக்தவச்சலபாரதிகட்டுடைத்துப் பார்க்கிறார். சாதியற்ற 'குடிச்சமூகமாக' இருந்து சாதிக்கு அருகாமையில் வந்து நின்று பின் செங்குத்துப் படிநிலைகளோடு கூடிய சாதியாக மாறிய தமிழ்ச்சமூகத்தின் அகவரலாற்றை இந்நூல் தரவுகளோடு விளக்குகிறது.- பிராமணியக்கோட்பாடு மட்டுமின்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

அண்ணல் அம்பேத்கார், ஹோகார்ட், துய்மோன் ஆகிய மூவர் முன் வைத்த சாதியின் தோற்றம் குறித்த கோட்பாடுகளை ஒப்பீட்டாய்வு செய்து தமிழ்ச்சமூகத்தில் சாதி தோன்றி வலுப்பட்ட வரலாற்றை அக மற்றும் புறச்சான்றுகளோடு பேசுகிற இந்நூல் பல புதியதிறப்புகளைக்கொண்டுள்ளது. இன்னும் புதிய விவாதங்களுக்குச் சாளரங்களைத் திறந்து விடுகிறது.

- ச.தமிழ்ச்செல்வன்

 


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் to your wish list.

You Recently Viewed...